வியாழன், 24 நவம்பர், 2011

Print Friendly and PDF

ஜேப்பியார் ஜோக்ஸ்

**** இது ஒரு மீள்பதிவு ***

நாம் அனைவரும் சத்யபாமா பொறியியல் கல்லூரியின் நிறுவனர் திரு. ஜேப்பியார் அவர்களை அறிவோம். அவரது ஆங்கிலப் புலமை குறித்து சில ஜோக்குகள் உண்டு. அவை உண்மையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவற்றை வாசித்ததில் சிரித்து சிரித்து வயிற்றுவலி வந்தது மட்டும் உண்மை.

அவற்றில் சி்ல…

#1. தனது குடும்பத்தினைப் பற்றி:

I have two daughters. Both of them are girls...

#2. கல்லூரி திடலில்:

-- All of you, stand in a straight circle.

-- There is no wind in the balloon.

-- The girl with the mirror please come her... (Meaning: girl with spectacles).

#3. ஒரு மாணவனிடம், மிகவும் கோபமாக:

I talk, he talk, why you middle middle talk ?

#4. மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கும் பொழுது:

-- You, rotate the ground four times...

-- You, go and under-stand the tree...

-- You three of you, stand together separately.

-- Why are you late - say YES or NO .....

#5. சினிமா தியேட்டர் ஜோக்கு:

ஜேப்பியார் ஒரு முறை சினிமா பார்க்க தன் துணைவியாருடன் தியேட்டருக்கு சென்றார். அங்கே அவரது மாணவன் ஒருவனும் வந்திருந்தான். ஜேப்பியார் அவனைப் பார்த்தார். ஆனால் அவன் அவரைப் பார்க்கவில்லை. அடுத்த நாள், இதை அந்த மாணவனிடம் கீழ்கண்டவாறு சொன்னார்.

Yesterday I saw you with my wife at the Cinema Theatre

#6. வகுப்பறையில்:

-- Open the doors of the window. Let the atmosphere come in.

-- Open the doors of the window. Let the Air Force come in.

-- Cut an apple into two equal halves - take the bigger half.

-- Shhh... Quiet, boys...the principal just passed away in the corridor

-- You, meet me behind the class. (meaning: AFTER the class .. )

-- Both of u three, get out of the class.

-- Close the doors of the windows please. I have winter in my nose  today ...

-- Take Copper Wire of any metal especially of Silver.....

-- Take 5 cm wire of any length....

#7. ஒரு முறை, ஜேப்பியார் தனது கல்லூரி விழாவிற்கு வருவதற்கு தாமதமானது. அதுவும், அவர் வந்து சேரும் முன்னரே விழா தொடங்கிவிட்டிருந்தது. உடனே, அவர் மேடைக்கு சென்று, இவ்வாறு தனது வருத்தத்தினைத் தெரிவித்தார்.

sorry i am late, because on the way my car hit 2 muttons (Meaning: goats)

#8. சத்யபாமா கல்லூரி தின விழா அன்று, அவர் பேசியவற்றிலிருந்து முத்தான ஒன்று:

This college strict u the worry no ... u get good marks, i the happy,

tomorrow u get good job, jpr the happy, tomorrow u marry i enjoy

#9. கடைசியான, ஆனால் கலக்கலான ஒரு ஜோக்:

st joseph freshyears தின விழாவில் அவர் பேசியது..

No ragging this college. anybody rag we arrest the police

#10. புதுசா சேர்த்தது:

-- girl girl talk, boy boy talk, but no boy girl talk

-- boy talking to girl telling cousin cousin…..

-- girl talking to boy telling cousin cousin…..

கொசுறு: பாவம், இதெல்லாம் கேக்க அந்த வெள்ளக்காரனுக்குத் தான் குடுத்து வக்கல.. :)

>> ஜேப்பியார் ஜோக்ஸ் >>

புதன், 23 நவம்பர், 2011

Print Friendly and PDF

Pitbull

i-know-you-want-me-cover-pitbull-rapper-24231689-500-500

Pitbull. இதுதான் மேற்கத்திய இசை உலகிலும், இன்றைய இளசுகளின்(என்னையும் சேர்த்துத் தான்Smile) மத்தியிலும் உலவும் magical word. இவர் ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், பாடலாசிரியர் மற்றும் இசைத் தயாரிப்பாளர்.  இவரது இயற்பெயர் அர்மான்டோ கிறிஸ்டியன் பெரஜ். இவர் பாடும் இசை வகை Dance-pop மற்றும் electro-hop வகையைச் சேர்ந்தது. அது மட்டும் இன்றி இவர் Rap செய்வதிலும் வல்லவர். தன் முதல் பாடலை 2002ம் ஆண்டு Lil John என்னும் இன்னொரு இசைக் கலைஞரின் ஆல்பத்தில் வெளியிட்டார்.  அந்தப் பாடல் 2 fast 2 furious படத்தில் இடம் பெற்றது.

2Fast 2 Furious OST

பிட்புல் , போதை பொருட்களை விற்பனை செய்ததால் தன் 16ம் வயதில் தன்னுடைய தாயால் அடித்து விரட்டப்பட்டவர். பின்னர் Miami Coral Park High Schoolல் படித்து முடித்து தன் career Rap செய்வது தீர்மனித்தார். ஆனால், அவரால் இசை உலகில் உடனே வெல்ல முடியவில்லை. காரணம், அவர் ஒரு கியுபன் அமெரிக்கர் மற்றும் நீல் நிற கண்கள் கொண்டவராயிருந்தார். அதனால் அமெரிக்கர்கள் அவரை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளவில்லை. 2004 – 05 சில ஹிட்கள் வந்தன, Billboard Hot 100 இசை வரிசையில் அவரது பாடல் 32ம் இடத்தைப் பிடித்தது 2009ம் ஆண்டுதான் பிட்புல்லை ரசிகர்கள் வெறித்தனமாக ரசிக்க ஆரம்பித்த ஆண்டு. ஆம், அந்த வருடம்தான் இன்றும் எல்லா பார்டிகளிலும் டி.ஜே.க்களால் போடப்படும் ஒரு பாடல் வெளி வந்து பலரை பைத்தியம் பிடிக்க வைத்தது. 

அந்தப் பாடலின் காணொளி கீழே:-

இப்பாடல் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட காணொளிகளில் ஒன்று.  பல கலைஞர்கள் பிட்புல்லுடன் இணைந்து பல பாடல்கள் வெளியிட்டனர். அவர் வரிகள் தங்கள் பாடலில் இடம் பெறுவதை பெருமையாகக் கருதினர். இவர் காணொளிகள் ஜிலு ஜிலு வகை. மேலும், இவர் ஒரு காமெடியன் போலவே பாடல் முழுதும் வருவார். 

இவரது லேட்டஸ்ட் பாடல்களில் சில:-

பிட்புல் இதே போல மேலும் பல ஹிட்கள் கொடுக்க வாழ்த்துகள்.

>> Pitbull >>

செவ்வாய், 22 நவம்பர், 2011

Print Friendly and PDF

பயோடேட்டா :: விஜயகாந்த்

vijay-14

                                                               பெயர்:             விஜயகாந்த்

                                               வயது:              உண்ணாவிரதம் இருக்கும்

                                                                          வயது அல்ல

                     அழைக்கப்படுவது:            கேப்டன், புரட்சிக் கலைஞர்

           அழைத்துக் கொள்வது:             கருப்பு எம்.ஜி.ஆர்

                        பழைய தொழில்:             நடிப்பு

                             புதிய தொழில்:             அரசியல்

                  தற்போதைய பதவி:             எதிர்க்கட்சித் தலைவர்

                           நிரந்தரப் பதவி:             தே.மு.தி.க. கட்சித் தலைவர்

                         பழைய நட்புகள்:            கலைஞர், லியாகத் அலி கான்

                              புதிய நட்புகள்:            சத்தியமா யாரும் இல்ல..

                          பொழுதுபோக்கு:           ஆக்‌ஷன் என்ற பெயரில்

                                                                           காமெடி படங்கள் நடிப்பது &

                                                                            எடுப்பது, பக்கம் பக்கமாக

                                                                            புள்ளிவிபரம் சொல்லி

                                                                            பார்ப்பவர்களை சாகடிப்பது,

                                                                            காஷ்மிர் முதல் குமரி வரை

                                                                            எல்லா தீவிரவாதிகளையும்

                                                                            ஒற்றை துப்பாக்கியால்

                                                                           ஒழித்துக் கட்டுவது, அரசியல்

                                                                          அறிக்கைகள் என்ற பெயரில்

                                                                         மொக்கை ஜோக்குகள் அடிப்பது

                                        சாதனை:               நடிகர் சங்கத்தின் முன்னாள்

                                                                          தலைவர், கட்சி தொடங்கி

                                                                         முதல்

                                                                           தேர்தலிலேயே சட்டசபைக்கு

                                                                           சென்றது, வடிவேலுவை    

                                                                           அட்ரஸ் இல்லாமல் ஆக்கியது

                                              கடுப்பு:              ஆண்டாள் அழகர் மண்டபச்

                                                                            சுவர் இடிப்பு, அம்மாவிடம்

                                                                           அஃபிஷியல்

                                                                           அப்ரென்டிஸாக பணிபுரிவது

                    பக்கவாத்தியங்கள்:            பிரேமலதா விஜயகாந்த்,

                                                                           கேப்டன் டிவி

                              நிரந்தர ஆசை:            தமிழக முதல்வர் ஆவது

                                                மக்கள்:           மொளகா அரைக்கத்

                                                                           தலையைக் கொடுப்பவர்கள்

                                 தொண்டர்கள்:           ரசிகர்கள்

                   லேட்டஸ்ட் காமெடி:          விலைவாசி ஏற்றத்தைக்

                                                                           கண்டித்து உண்ணாவிரதம்

                                            பம்முவது:        அம்மாவைப் பார்த்து

                                                நிராசை:         ஆட்சியில் பங்கு

                            

 

 

>> பயோடேட்டா :: விஜயகாந்த் >>

திங்கள், 21 நவம்பர், 2011

Print Friendly and PDF

கொலவெறி கலரு

15 வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள்….

காலையிலேயே அப்பா எழுப்பி விட்டுட்டாரு. எந்திரிச்சு மொகம் கழுவிட்டு, பல்லயும் தேச்சுட்டு காஃபிக்கு வெயிட்டிங். அப்பா, “தம்பி, XYZABC  அங்கிள் வீட்டுக்குப் போயி சீட்டுப் பணத்தக் குடுத்துட்டு வாப்பா”. நா அப்பா சொன்ன அந்த XYZABC அங்கிள பாத்ததில்ல. நா, “அவர நான் பாத்ததில்லயே, அவரு எப்புடி இருப்பாரு?”. அப்பா, “அவரா? அவரு கொஞ்சம் கருப்பா இருப்பாரு”. சரின்னுட்டு வீட்ல இருந்து கெளம்பியாச்சு. அப்பா சொன்னவரையும் பாத்து பணத்தயும் குடுத்தாச்சு. ஆனா, அப்பா சொன்ன மாதிரி கொஞ்சம் கருப்பா இல்ல. ஆனா… காச்சுன தார் கலர்ல இருந்தாரு. எனக்கு சிரிப்ப அடக்க முடியல, அந்தாளு இவ்வளவு கருப்பான்னு.

black front

4 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாள்….

ஆபிஸ்ல சாப்ட்டு முடிச்சுட்டு, தம் போடுற பய புள்ளைகளோட வெளிய வந்தேன். வழக்கம் போல ஒருத்தன மாத்தி ஒருத்தன் கால் வாரிட்டும், கிண்டலும் கேலியும் பண்ணிட்டு இருந்தானுங்க. அப்போ பேச்சு லைட்டா நம்ம பக்கம் திரும்புச்சு. நம்ம பயபுள்ளைகள்ல ஒன்னு, “ டேய் மச்சி, ஒனக்கெல்லாம் பிரச்சினையில்ல. கருப்பா இருக்க, பொய் சொல்ல மாட்டேன்னு தெரியும். அதனால ஈசியா பேங்க் லோன் கெடச்சிரும்”. எனக்கு சிரிப்பு வந்தாலும் கூடவே எரிச்சலும் வந்தது. சொன்னவன் ஏதோ தக்காளி கலரில இருக்கா மாதிரி பேசுனான், ஆனா எல்லாத்துக்கும் தெரியும் அந்த ##**%$#%$ம் கருவாயந்தான்னு.

கருப்பு. இதை சொல்லும் போது எனக்கு விவேக் சிவாஜியில் சொல்லும் ஒரு டயலாக்தான் நினைவுக்கு வருகின்றது. “ஏய் யாரப் பாத்து கருப்புன்னு சொன்ன? தமிழ்நாட்ல ரெண்டு விஷயத்தப் பத்தி மட்டும் பேசக் கூடாது. ஒண்ணு கற்பு, இன்னொண்ணு கருப்பு”. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டின் மாநில கலரே கருப்புத்தான் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. தேசிய கலர் இருக்கும் போது மாநில கலர் இருப்பதில் தவறில்லையே? பல ஆண்களிடம் அவர்கள் மனதில் தான் கருப்பாய் இருக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மை இன்றும் உள்ளது. என்னிடமும் இருந்தது, நான் நிறத்தைப் பற்றிய மாயையிலிருந்து விடுபடும் வரை.

Sivaji Comedy: Vivek Speaking on Black color

ஆண்களே இப்படி என்றால் பெண்கள் கொஞ்சம் கலர் கம்மியாயிருந்தாலும் போதும், ஃபேஸ் க்ரீம்களும், ஸ்க்ரப்பர்களும், சன் ஸ்க்ரீன் லோஷன்களும் மாதாந்திர பட்ஜெட்டில் சிறப்பிடம் பிடிக்கும். கருப்பு நிறம் உடையவர்கள் அழகில்லை என்று பரப்புரை செய்வதில் மீடியாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒருவரின் நிறத்தை முடிவு செய்வது யாரும் அல்ல. சம்பந்தப்பட்ட நபரும் அல்ல, உடலில் நிகழும் ரசாயன மாற்றங்கள் மட்டுமே. இதை அறியாத அறிவிலிகள் ஏதோ அந்த க்ரீம் போட்டால் போதும், இல்லை இந்த லோஷன் போட்டால் போதும், நாம் அழகாகிவிடுவோம் என்று முட்டாள்தனமாக எண்ணி ஆயிரக்கணக்கில் செலவு செய்கின்றனர். கருப்பு நிறம் ஒரு குறையில்லை. கண்டிப்பாக தன்னம்பிக்கைக்கு அது தடையுமில்லை.

Fairever_FairnessCream

அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் அவர்கள் பங்குக்குக் கருப்பை ஏதோ பெரிய குறை போல சித்தரிப்பதும் சிரிப்பைத் தவிர வேறெதையும் வரவழைப்பதில்லை. இப்படித்தான் ஃபேர் & லவ்லியும், ஒரிஃப்ளேமும் இந்திய மார்க்கெட்டைப் பிடித்தன என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். இந்த கலர் பிரச்சினையினால் எவ்வளவு கொலவெறி பிரச்சினைகள். இதை இரண்டாகப் பிரிக்கலாம்.

பெண்கள்:- வயசுப் பெண்களுக்கு கருப்பாக இருந்தால் பசங்கள் அவர்களைப் பார்ப்பதில்லை என்ற எண்ணம், இன்னும் சொல்லப் போனால் அது ஒரு பயமாகவும் மாற அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. மேலும், கல்யாண சந்தையில் செவத்த பெண்களுக்கே முன்னுரிமை. அதனால், இந்த கருப்பு நிற பிரச்சினையில் தினமும் உழன்று மனதளவில் மிகவும் பாதிப்படைகின்றனர். இதற்கு தீர்வு, முதலில் பெண்கள் கருப்பு நிறத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டும். சமுதாயமும் இதை உணர வேண்டும்.

ஆண்கள்:- பசங்களுக்கு இதில் அவ்வளவு பிரச்சினை இல்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் “எனக்கு செவப்பான பொண்ணுதான்ப்பா வேணும்” என்று சொல்லி பல கருப்பான பெண்களுக்கு ஆப்பு வைத்து விடுகின்றனர். இது தவிர்க்க வேண்டிய ஒரு விஷயம். வாழ்வில் ஜெயிக்க நிறம் ஒரு பொருட்டல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

கடைசியாக, உங்கள் நிறத்தை எள்ளல் செய்பவர்களை துளியும் மதிக்க வேண்டியதில்லை. மாறாக, சட்டை செய்யாதீர்கள், அதுவே நீங்கள் அவர்களுக்கு நீங்கள் தரும் சாட்டையடி. எல்லாவற்றுக்கும் மேலாக, சமூகம் கருப்பு நிறத்தைப் பற்றிய தன்னுடைய கண்ணோடத்தை மாற்றியே தீர வேண்டும். ஏனென்றால், Being presentable is what matters not being colorful.

கருப்பும் அழகுதான்யா!!!

 

>> கொலவெறி கலரு >>

சனி, 3 செப்டம்பர், 2011

Print Friendly and PDF

ஜாலிடே மொக்கைஸ்

மாப்பிள்ள.... சீக்கிரம் தாலி கட்டுங்க... நல்ல நேரம் போய்ட போகுது...
அப்ப தாலி கட்டினதும் நல்ல நேரம் போய்டுமா?
(யாருக்கு?... யாருக்கோ....)



இந்த பென்சில் எல்லாம் ஏன் ஹார்லிக்ஸ் பாட்டில்குள்ள போட்டு வச்சிருக்க?
ஹார்லிக்ஸ் தான்   டாலர் (taller) , ஸ்டிராங்கர்(stronger), ஷார்ப்பர் (sharper)  ஆக்கும் னு விளம்பரத்துல சொன்னாங்களே...



ஏன்யா சும்மா சும்மா வந்து கடன் கேட்டு நச்சரிக்கற...?
ஒரு தரம் குடுத்துருங்க சாமி.. அப்புறம் இந்த பக்கம் கூட தல வச்சு படுக்க மாட்டேன்...




சீரியல், சினிமா இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?
எடுக்கறவங்க அழுதா அது சினிமா. பாக்கறவங்க அழுதா அது சீரியல்.


மாப்பிள.. உங்களுக்கு நியுமராலஜி ல ரொம்ப நம்பிக்கை இருக்குங்கறது எல்லாம் சரி... அதுக்காக தாலில ஏழு முடிச்சுதான் போடுவேன்கறது கொஞ்சம் கூட நல்லா இல்ல..


இந்த மிச்சர் பாக்கெட் என்ன விலை?
பத்து ரூபா.
லூசுன்னா எவ்ளோ?
எல்லாருக்கும் ஒரே விலை தான்பா.


இந்த ஊசி போட்டா கை தூக்க முடியாது...
அதனால என்ன டாக்டர்.
அதனால நீங்க இப்பவே பீஸ் எடுத்து குடுத்துடுங்க.


எவ்வளவு கோவம் வந்தாலும் கட்டுப்பாட்ட கைவிட்ற கூடாது....ஓஓ கேகேகே ?
ரைட்டு...ரைட்டு.... சங்கத்த கலைங்க...



>> ஜாலிடே மொக்கைஸ் >>